| ADDED : ஜன 31, 2024 11:19 PM
ராயபுரம்:சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம், 36. இவர், பிரபல தனியார் மருத்துவக் கல்லுாரியில், முதுகலை பல் மருத்துவம் படித்து வருகிறார்.இவரது வீட்டின் இரண்டாவது தளத்தில், கடந்த 10 ஆண்டுகளாக 30 வயது பெண் வசித்து வருகிறார். இவர்ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:என் வீட்டின் படுக்கை அறையில், நேற்று முன்தினம் புதிதாக பேனா ஒன்று இருந்தது. அதை பரிசோதனை செய்தபோது, அந்த பேனாவில், கேமரா இருந்ததை கண்டறிந்தேன்.இது குறித்து என் கணவருக்கு தகவல் தெரிவித்ததும், அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்து, பேனாவில் உள்ள கேமராவை பரிசோதனை செய்தார். அதில் உடை மாற்றுவது உள்ளிட்ட வீடியோக்கள் பதிவாகி இருந்தன. இந்த சம்பவத்தை மேற்கொண்டவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து ராயபுரம் போலீசார் விசாரித்தனர். இதில், பெண்ணின் வீட்டின் அதே இரண்டாவதுவது தளத்தில் வசிக்கும், வீட்டின் உரிமையாளரின் மகன் இப்ராஹிம் என்பவர், படுக்கை அறையில் பேனா கேமரா வைத்து வீடியோக்கள் எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.