உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாடுகளுக்கு பதிவு உரிமம் மாநகராட்சி நடவடிக்கை

மாடுகளுக்கு பதிவு உரிமம் மாநகராட்சி நடவடிக்கை

சென்னை:சென்னை மாநகராட்சியில், தெருநாய்கள் பெருக்கம், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாடுகள் முட்டி, உயிரிழப்பு ஏற்படும் நிலையும் தொடர்ந்து வருகிறது.இதற்கு தீர்வு ஏற்படுத்துவது குறித்து, மத்திய கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள ஆணையர் அபிஜித் மித்ராவுடன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சென்னை மாநகரில், தெருநாய்கள் மற்றும் கால்நடைகள் கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் பிரச்னை, நாட்டின் அனைத்து நகரங்களிலும் உள்ளது.இப்பிரச்னையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி, மத்திய அரசு ஆணையர் அபிஜித் மித்ராவுடன் ஆலோசித்தோம்.குறிப்பாக, நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்ப்போருக்கு பதிவு உரிமம் வழங்குதல், ஏழ்மை நிலையில் இருப்போருக்கு பொது தொழுவம் ஏற்படுத்துதல் போன்றவை, மத்திய அரசு ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டன. இந்த விவகாரத்தில், விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ