| ADDED : டிச 03, 2025 06:17 AM
திருப்போரூர் : கேளம்பாக்கத்தில், சாலையில் தேங்கிய மழைநீர், 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. 'டிட்வா' புயல் எதிரொலியாக செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் சில தெருக்கள், காலி மனைகளில் மழைநீர் தேங்கி நின்று, பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், மழைநீர் தேங்காமல் இருக்க, 'பொக்லைன்' இயந்திரம் மூலம் வழி ஏற்படுத்தி, மழைநீர் அகற்றப் பட்டது. அதேபோல், ஏகாட்டூர் ஓ.எம்.ஆர்., சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப் பட்டது.