அச்சிறுபாக்கம் கிளை நுாலகத்திற்கு பணியாளர் நியமிக்க கோரிக்கை
அச்சிறுபாக்கம், -சென்னை --- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே, அச்சிறுபாக்கம் கிளை நுாலகம் அமைந்துள்ளது.அச்சிறுபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையில் நுாலகம் செயல்பட்டு வருகிறது.ஆனால், கிளை நுாலகத்தில், ஒரு பணியாளர் மட்டுமே உள்ளதால், அவருடைய விடுப்பில் நுாலகம் பூட்டப்படுகிறது.அதனால், கூடுதலாக ஒரு பணியாளரை நியமனம் செய்ய, நுாலகத் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.