| ADDED : மார் 14, 2024 07:55 PM
கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. அவற்றுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள், தங்களது தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என, நகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் கூறியதாவது:நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிகம் செய்யும் வணிகர்கள் மற்றும் நிறுவனங்களின் தொழில் உரிமங்களை, இந்த மாத கடைசிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.தவறும்பட்சத்தில், அபராதத் தொகையுடன் வசூலிக்கப்பட உள்ளது. எனவே, அபராதத் தொகையை தவிர்க்க, அனைவரும் இந்த மாத கடைசிக்குள், தங்களது தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.மேலும், புதிதாக தொழில் தொடங்குவோர், தங்களது ஆவணங்களை நகராட்சி அலுவலகத்தில் வழங்கி, உரிய கட்டணம் செலுத்தி தொழில் உரிமங்களை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.