உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழைநீர் வடிகால்வாய் சக்தி நகரில் கட்ட கோரிக்கை

மழைநீர் வடிகால்வாய் சக்தி நகரில் கட்ட கோரிக்கை

ஆலப்பாக்கம்: ஆலப்பாக்கம் சக்தி நகர் மூன்றாவது தெருவில், பல ஆண்டுகளுக்கு முன், மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. தற்போது, கால்வாய் சீரழிந்து உடைந்து, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது. மழை பெய்தால், குளம்போல் தேங்கி நிற்கிறது.இத்தெரு வழியாக, அரசு மற்றும் தனியார் பள்ளி, மருத்துவமனைக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். சாலையில், கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தியிடமாக மாறி, தொற்றுநோய் ஏற்படும் சூழல் உள்ளது.இதை தவிர்க்க, மழைநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் கட்ட வேண்டும் என, ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தனர்.எனவே, பொதுமக்கள் நலன்கருதி, மழைநீர் கால்வாய், சிறுபாலம் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். இதை செயல்படுத்த உள்ளதாக, ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்