கிராம நிர்வாக அலுவலகத்துக்கு புது கட்டடம் கட்ட கோரிக்கை
அச்சிறுபாக்கம், தண்டரைப்புதுச்சேரி ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டரைப்புதுச்சேரி ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு, வேடந்தாங்கல் செல்லும் சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.தற்போது கட்டடம் பழமையானதால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.இதனால், கிராம நிர்வாக ஆவணங்கள், பதிவேடுகளை பாதுகாப்பதில் சிரமமாக உள்ளது.எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் அதே இடத்தில், புதிதாக கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.