உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

மறைமலைநகர்:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இதை பயன்படுத்தி கிராம மக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், இந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள், அரசு நெல் கொள்முதல் நிலையம், சமுதாய கூடம் உள்ளிட்டவை உள்ளன.இங்கு, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.எனவே, இப்பகுதியில் உயர்கோபுர மின் விளக்குகள் புதிதாக அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி