உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலுார் சாலையில் அபாய புளியமரம் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

பாலுார் சாலையில் அபாய புளியமரம் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

மறைமலை நகர்:பாலுார் சாலையில் உள்ள அபாய புளியமரம் அருகே, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிங்கபெருமாள் கோவில் - பாலுார் சாலை, 13 கி.மீ., துாரம் நீளம் உடையது. இந்த சாலையை பாலுார், ரெட்டிப்பாளையம், வெண்பாக்கம், கொளத்துார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் ரெட்டிப்பாளையம், பாலுார் பகுதியில் உள்ள செங்கல்பட்டு சூளைக்கு லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள், அதிக அளவில் இச்சாலையில் சென்று வருகின்றன.செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலையான இதில், கொளத்துார் பகுதியில் சாலையை ஒட்டி, பெரிய புளியமரம் ஒன்று உள்ளது.இந்த புளியமரம், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரியாததால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த புளியமரத்தில், இரவில் ஒளிரும் பட்டைகள் மற்றும் எச்சரிக்கை குறியீடுகள் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை