பழுதான குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை
சித்தாமூர், சித்தாமூர் அருகே முகுந்தகிரி ஊராட்சிக்கு உட்பட்ட புதுார் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.கூடுதல் நீர் ஆதாரத்திற்காக குடியிருப்புப் பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் மினி டேங்க் அமைக்கப்பட்டது.கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாமல், மின் மோட்டாரின் பாகங்கள் பழுதடைந்ததால், தண்ணீர் ஏற்றாமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதிமக்கள் சிரமப்படுகின்றனர்.ஆகையால் ஊராட்சி நிர்வாகம் பழுதடைந்துள்ள மினி டேங்கை சிரமைத்து, மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் எதிர்பார்கின்றனர்.