சேதமான தரைப்பாலத்தை சீரமைக்க அமைக்க கோரிக்கை
மறைமலை நகர்:காயரம்பேடு, மறைமலை நகர் சாலை 6 கி.மீ., தூரம் உடையது. இந்த சாலையை கடம்பூர், கலிவந்தபட்டு,கருநிலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். காயரம்பேடு மற்றும் அதனைச்சுற்றி உள்ள கிராம மக்கள் தினமும் மறைமலைநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த சாலையில் கலிவந்தபட்டு,- காயரம்பேடு இடையே சாலையின் நடுவே சிறிய தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக கலிவந்தபட்டு ஏரிக்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தண்ணீர் செல்வது வழக்கம். தற்போது இந்த தரை பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லாமலும் மண் அரிப்பு ஏற்பட்டும் காணப்படுகிறது.எ னவே இந்த பகுதியில் புதிய தரைப்பாலம் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.