உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு:தமிழக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், செங்கல்பட்டில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு பேராபத்து ஏற்படுத்தும் வகையில், தனித்தனியாக இயங்கும் அரசு தரவு மையம் மற்றும் சிறுசேமிப்பு இயக்குனரங்களை கருவூலகத்துடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.அரசாணை 343ஐ திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலர் வீரராகவன், மாவட்ட இணை செயலர் தனஞ்செழியன் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை