உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 10 நாளாக குடிநீர் சப்ளை இல்லை செம்மஞ்சேரியில் சாலை மறியல்

10 நாளாக குடிநீர் சப்ளை இல்லை செம்மஞ்சேரியில் சாலை மறியல்

செம்மஞ்சேரி, பத்து நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால், செம்மஞ்சேரி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். செம்மஞ்சேரி, சுனாமி நகரில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட, 140 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 10 நாட்களாக, முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். நேற்றும் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், குடியிருப்புகளில் வசிப்போர் செம்மஞ்சேரி - நுாக்கம்பாளையம் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், நுாக்கம்பாளையம் பிரதான சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. செம்மஞ்சேரி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பேசினர். அப்போது, குழாய் மற்றும் மோட்டார் பழுது காரணமாக, குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டதாகவும், பழுதை சரி செய்து, இரண்டு மணி நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும், அதிகாரிகள் கூறியதையடுத்து, மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். தொடரும் அவலம் பல்லாவரம், கவுல்பஜார் ஊராட்சிக்கு, மெட்ரோ நிர்வாகத்திடம் இருந்து தண்ணீரை வாங்கி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகம் செய்யப்படுகிறது. பல்லாவரம் 'வெட்டர் லைன்' வழியாக செல்லும் மெட்ரோ குழாயில் இருந்து, தனியாக குழாய் அமைத்து, இவ்வூராட்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த சப்ளை அடிக்கடி தடைபடுவதால், அப்பகுதியில் வசிப்போர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், கடந்த 15 நாட்களாக, குடிநீர் சப்ளை முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் வசிப்போருக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இவ்வூராட்சிக்கு முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கவுல்பஜார் ஊராட்சியிலும்

தொடரும் அவலம்

பல்லாவரம், கவுல்பஜார் ஊராட்சிக்கு, மெட்ரோ நிர்வாகத்திடம் இருந்து தண்ணீரை வாங்கி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகம் செய்யப்படுகிறது. பல்லாவரம் 'வெட்டர் லைன்' வழியாக செல்லும் மெட்ரோ குழாயில் இருந்து, தனியாக குழாய் அமைத்து, இவ்வூராட்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த சப்ளை அடிக்கடி தடைபடுவதால், அப்பகுதியில் வசிப்போர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், கடந்த 15 நாட்களாக, குடிநீர் சப்ளை முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் வசிப்போருக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இவ்வூராட்சிக்கு முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை