உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோரம் மீன் வியாபாரம் காத்தங்கடை சந்திப்பில் கசகச

சாலையோரம் மீன் வியாபாரம் காத்தங்கடை சந்திப்பில் கசகச

கடலுார்:கூவத்துார் அடுத்த கடலுார், காத்தங்கடை பகுதியில், புதுச்சேரி சாலை கடக்கிறது. இச்சாலையில், கடலுார், அணைக்கட்டு சாலைகள் இணைவதால், முக்கிய சந்திப்பாக உள்ளது.சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் தொலைதுாரத்தில் இருந்து வரும் வாகனங்கள் இச்சந்திப்பை கடந்தே செல்கின்றன.

பேரம்

சந்திப்பின் கிழக்கு பகுதி வளைவில், மீன் வியாபாரிகள் சாலை பகுதியை ஆக்கிரமித்து, மீன் வியாபாரம் செய்கின்றனர். கோடையில் நுங்கு வியாபாரிகளும், அங்கு வியாபாரம் செய்கின்றனர்.அவற்றை வாங்க வருவோர், கார், இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு பேரம் பேசுகின்றனர். இதனால், பிற வாகனங்கள் செல்ல இயலவில்லை. வாகனம் ஒதுங்கக்கூட இடமில்லை.அதுமட்டுமின்றி, வியாபாரம் முடிந்ததும் அங்கேயே கழிவுகளை குவித்துச்செல்வதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது.

மாற்றிடம்

தொடர்ச்சியாக செல்லும் வாகனங்கள், மீன் வாங்க காத்திருப்போரின் வாகனங்கள், மீன் வியாபாரிகளின் வாகனங்கள் என, அப்பகுதியே நெரிசலுடன் காணப்படுகிறது.போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து அபாயத்தை தவிர்க்க, மீன் வியாபாரிகளுக்கு வேறிடம் அமைத்துக் கொடுக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை