உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் கொள்ளை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த, மேலைமையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல், 62; கடந்த 28ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான திருச்சிக்கு சென்றார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது குறித்து அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் பழனிவேலுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிந்தது. இது குறித்து பழனிவேல் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குபதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை