உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய பூங்காவிற்கு ரூ.1.47 கோடி ஒதுக்கீடு

புதிய பூங்காவிற்கு ரூ.1.47 கோடி ஒதுக்கீடு

வேளச்சேரி: வேளச்சேரியில், 1.50 ஏக்கர் இடத்தில் பூங்கா அமைக்க, 1.47 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, சேவா நகரில், 1.50 ஏக்கர் பரப்பில் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில், பூங்கா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, பூங்கா அமைக்க, மாநகராட்சி சார்பில், 1.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில், பூங்கா அமைக்கும் பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை