உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த தேன்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ரோகித், 10. இவர், தேன்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவர், வீட்டிலிருந்து வெளியே விளையாடுவதற்காக சென்றுள்ளார்.இரவு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது, தேன்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில், இறந்த நிலையில் சிறுவன் உடல் மிதந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ