| ADDED : பிப் 22, 2024 12:59 AM
சென்னை:சென்னையில் நடந்து வரும், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.தாம்பரத்தில் நடந்த 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 45 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து, 291 ரன்களை அடித்தது.அடுத்து பேட் செய்த நியூசிலாந்து அணி, 45 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 175 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால், 116 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.மற்றொரு 'லீக்' ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, கனடாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.இதனால், 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி, இரண்டு லீக் ஆட்டங்களில் இரண்டிலும் வெற்றி பெற்று, 4 புள்ளிகளை கைப்பற்றி, இப்பிரிவில் முதலிடத்தில் உள்ளது.'பி' பிரிவில் ஆஸ்திரேலிய அணி, தன் முதல் லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை, 168 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் 'ரெட்ஸ் ஆப் வேல்ஸ்' எனும் இதர உலக அணியை 41 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டுள்ளது.ஆஸ்திரேலிய அணி, இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி கண்டு, 4 புள்ளிகளை கைப்பற்றி, 'பி' பிரிவில் முதலிடத்தை தக்கவைத்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.