உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மறைமலை நகரில் சுகாதார சீரழிவு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மறைமலை நகரில் சுகாதார சீரழிவு

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இவற்றில், ஆறு வார்டுகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.நேற்று முன்தினம் மாலை, அண்ணா சாலை பகுதியில் உள்ள இரண்டு பாதாள சாக்கடை மூடிகளின் மேல் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் வழிந்தோடி தேங்கின. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசியது.சுற்றியுள்ள குடியிருப்புகள், கடைகள் மற்றும் மருத்துவமனைக்கு வருவோர், அதனால் கடுமையாக அவதியடைந்தனர். வாகன ஓட்டிகள், பெண்கள் உள்ளிட்டோர் இப்பகுதியை கடக்கும் போது, முகம் சுளித்தபடி செல்கின்றனர்.இந்த பகுதியில் பாதாள சாக்கடை பொங்கி, அடிக்கடி சாலையில் கழிவுநீர் வெளியேறி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து, இப்பகுதிவாசிகள் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று, சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி துாய்மை பணியாளர்கள், கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை சரிசெய்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை