உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர்- -- -பவுஞ்சூர் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி

செய்யூர்- -- -பவுஞ்சூர் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி

செய்யூர், : செய்யூர் அடுத்த திருப்புரகோவில் கிராமத்தில், பவுஞ்சூர் -- செய்யூர் செல்லும் சாலை உள்ளது.இரண்யசித்தி, செங்காட்டூர், புதுப்பட்டு, அம்மனுார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலை இது. இச்சாலையை, தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.மழைக் காலங்களில் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் வயல்களில் இருந்து வெளியேறும் மழைநீர், சாலையில் பெருக்கெடுத்து, ஆண்டுதோறும் சாலை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலை சேதமடைவதை தடுக்க வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ