| ADDED : மார் 14, 2024 12:02 AM
கூடுவாஞ்சேரி:நந்திவரத்தில் உள்ள கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு தினந்தோறும் இடம் மற்றும் வீடுகள் வாங்குவோர் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு வருகின்றனர்.அதற்கு, 20 மற்றும் 50 ரூபாய் அரசு முத்திரைத்தாள்கள் கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் 100 ரூபாய் முத்திரைத்தாள் வாங்கி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:சில தினங்களாக 20, 50 ரூபாய் அரசு முத்திரை தாள்கள் கிடைக்கவில்லை. நந்திவரம்- - கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு முத்திரைத்தாள் விற்பனை செய்யும் முகவர்களிடமும் கிடைக்கவில்லை.தற்போது 20, 50 ரூபாய் முத்திரைத் தாள்கள் கிடைக்காததால், 100 ரூபாய் முத்திரைத்தாள்களை, 120 ரூபாய் கொடுத்து வாங்கி வாடகை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பத்திரப் பதிவிலும் மந்த நிலை நீடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.