உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தென் மண்டல டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்

தென் மண்டல டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்

சென்னை: இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் ஆதரவில், அமெட் பல்கலை சார்பில், தென் மண்டல அளவிலான மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டி, கானத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில், கடந்த மூன்று நாட்கள் நடந்தது. போட்டியில், தென் மண்டல அளவில், 80 பல்கலை அணிகள் பங்கேற்றன.நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில், சென்னையை சேர்ந்த எஸ்.ஆர்.எம்., மற்றும் அண்ணா பல்கலைகள் எதிர்கொண்டன.அதில், 3 - 0 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் பெங்களூரு ஜெயின் பல்கலை பலப்பரீட்சை நடத்தின.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், 3 - 2 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை