உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு அரசு மரியாதை

உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு அரசு மரியாதை

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 53, அணைக்கட்டு காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்தார்.கடந்த 19ம் தேதி இரவு பணி முடிந்து, தன் 'யுனிகார்ன்' இருசக்கர வாகனத்தில் பவுஞ்சூரில் இருந்து வீட்டிற்கு சென்ற போது, செய்யூர் அருகே எதிரே வந்த லோடு ஆட்டோ, இவரது இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இதில் குமார் படுகாயமடைந்தார். சென்னை மணப்பாக்கம் பகுதியில் செயல்படும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இறுதிச் சடங்கு முடிந்து, நேற்று காலை 11:30 மணிக்கு, 36 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு, வெண்ணாங்குப்பட்டு மயானத்தில் எரியூட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை