உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தண்டவாளத்தில் மாணவி உடல் மீட்பு

தண்டவாளத்தில் மாணவி உடல் மீட்பு

செங்கல்பட்டு:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டி புண்ணியம் ரயில்வே கேட் - பரனுார் ரயில் நிலையம் இடைப்பட்ட பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை பள்ளி சீருடையில் மாணவியின் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார், நடத்திய விசாரணையில், இறந்த மாணவி சென்னை தி.நகர் தர்மாபுரம் பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகள் துர்கா தேவி, 17, என்பதும் தி.நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்ததும் தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்