கத்தியை காட்டி மிரட்டி மாணவரிடம் மொபைல் போன் பறிப்பு
மறைமலை நகர்: பொத்தேரியில் கத்தியைக் காட்டி மிரட்டி, கல்லுாரி மாணவரிடம் மொபைல் போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் தஸ்வந்த், 19. இவர், அதே பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், இளநிலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில், பொத்தேரி பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், தஸ்வந்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 'விவோ' மொபைல் போனை பறித்துச் சென்றுள்ளனர். தஸ்வந்த் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.