உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.ஒரு கோடி கோவில் இடம் நந்திவரத்தில் மீட்பு

ரூ.ஒரு கோடி கோவில் இடம் நந்திவரத்தில் மீட்பு

கூடுவாஞ்சேரி:நந்திவரத்தில், நந்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் நந்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமாக, ஜெய்பீம் நகர் ஐந்தாவது தெருவில், சர்வே எண் 313ல், 1,752 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடம், சாது சுந்தர்சிங் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் வீடு கட்டப்பட்டிருந்தது. புகாரின்படி, அந்த இடத்தை மீட்க, வருவாய்த் துறை அதிகாரிகள் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இடத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி, ஆக்கிரமிப்பு நபருக்கு கடந்த ஜூன் 10ம் தேதி, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட நபர், இடத்தை காலி செய்ய மறுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து, ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு, 'சீல்' வைத்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு, ஒரு கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி