உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே கடுக்கலுார் கிராமத்தில், முத்தாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு, பூஜை முடிந்து 7 மணிக்கு, கோவில் அர்ச்சகர் சந்திரசேகரன், கோவிலை பூட்டிச் சென்றுள்ளார்.இந்நிலையில், நேற்று காலை 8:30 மணிக்கு, வழக்கம்போல கோவிலை திறக்கச் சென்றபோது, கோவில் வெளிப்புற கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்துள்ளார்.கருவறை பூட்டும் உடைக்கப்பட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு இருந்த, 250 கிராம் வெள்ளி நெற்றிப்பட்டை, 100 கிராம் வெள்ளி சங்கு கவசம், 6 கிராம் தங்க நகைகள் திருடு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.அதன் பின், சூணாம்பேடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வழக்குப்பதிந்து, கோவில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி