| ADDED : ஜன 07, 2024 11:23 PM
அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட, மூன்று குடிநீர் கிணறுகள் உள்ளன. இவற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்த குடிநீர் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின் காப்பர் ஒயர்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.தொழுப்பேடு சுற்றுவட்டார பகுதிகளில், விவசாய நிலங்களில் உள்ள காப்பர் மின் ஒயர்களை திருடி செல்வது தொடர்ந்து வருகிறது.எனவே, அச்சிறுபாக்கம் காவல் துறையினர், இது குறித்து விசாரணை செய்து, மின் ஒயர்களை திருடி செல்லும் மர்ம நபர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.