உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் தும்பிகுளம் ரூ.70 லட்சத்தில் மேம்பாடு

திருக்கழுக்குன்றம் தும்பிகுளம் ரூ.70 லட்சத்தில் மேம்பாடு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், செங்கல்பட்டு புறவழிப்பாதையை ஒட்டி, தும்பிக்குளம் எனப்படும் வண்ணான்குளம் உள்ளது.அதில், நீண்டகாலத்திற்கு முன், நீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, இப்பகுதி மக்களின் நீராதாரத்திற்கு பயன்பட்டது.நாளடைவில், பராமரிப்பின்றி துார்ந்து சீரழிந்தது. பேரூராட்சிப் பகுதி நீர்நிலை மேம்பாட்டிற்காக, கலைஞர் மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கி, தற்போது துார்வாரி மேம்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, பேரூராட்சித் தலைவர் யுவராஜ் கூறியதாவது:இக்குளத்தை, 70 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. குளத்தின் நாற்புறக் கரையில், பேவர்பிளாக் நடைபாதை, உடற்பயிற்சி மேடை, எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ