உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் திருக்குறள் மாநாடு

செங்கையில் திருக்குறள் மாநாடு

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட திருவள்ளுவர் மன்றம் சார்பில், திருவள்ளுவரின் ஆதிக்க வெறி, போர் வெறி, அடிமை, தீவினை, மூடநம்பிக்கை, போலித் துறவு, ஊழல், வன்முறை, உயிர்க்கொலை, தீ நட்பு எதிர்ப்புகள் ஆய்வுத் தலைப்பில், உலகளாவிய அளவில் ஒரே நாளில், 100 இடங்களில் மாநாடு நடந்தது.இந்த மாநாட்டில், நுாறு மலர்கள் வெளியீட்டு விழா, சுந்தர எல்லப்பன் தலைமையில், செங்கல்பட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.இதில், அரசு சிறப்பு வழக்கறிஞரான கனகராஜ் பங்கேற்று, மாநாட்டு மலரை வெளியிட, ஆசிரியர் ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். விழாவில், நுாறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார். துரைராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை