உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலாற்றில் மணல் திருட்டு படாளத்தில் மூவர் கைது

பாலாற்றில் மணல் திருட்டு படாளத்தில் மூவர் கைது

மதுராந்தகம்: படாளம் அருகே பிலாப்பூர் பாலாற்று படுகையில், மணல் திருட்டில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அடுத்த பிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த கடா என்கிற நாகராஜ், 30, தினேஷ், 26, குமரவேல், 29, ஆகிய மூவரும், நேற்று பிலாப்பூர் பாலாற்று படுகையில், டாடா ஏஸ் வாகனத்தில் மணல் கடத்த முயன்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூவரையும் கைது செய்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.பின், வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை