உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓ.எம்.ஆரில் மூன்று குளங்கள் ரூ.6.60 கோடியில் மேம்பாடு

ஓ.எம்.ஆரில் மூன்று குளங்கள் ரூ.6.60 கோடியில் மேம்பாடு

சோழிங்கநல்லுார்:ஓ.எம்.ஆரில் உள்ள மூன்று குளங்களை மேம்படுத்த, 6.60 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பம் பகுதியில், ஈஸ்வரன் கோவில் தெரு மற்றும் பல்லவன் குடியிருப்பில், இரண்டு குளங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத இந்த குளங்களை மேம்படுத்த, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, 4.78 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வார்டு, ஓ.எம்.ஆர்., பெரிய சத்திரக்குளத்தை மேம்படுத்த, 92.77 லட்சம் ரூபாய் ஒதுக்கி, முதற்கட்ட பணி முடிந்தது. இரண்டாம் கட்ட பணிக்கு, 1.82 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கான நிதியையும் மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. பருவமழை முடிந்த பின், இதற்கான பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ