உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ரூ.53 லட்சத்தில் கழிப்பறை வசதி

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ரூ.53 லட்சத்தில் கழிப்பறை வசதி

திருப்போரூர், திருபோரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவர்கள், கோவில் சரவண பொய்கை குளத்தில் நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏற்கனவே, கோவில் கிழக்கு குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கழிப்பறை உள்ளது. ஆனாலும் கோவில் திருவிழா, முகூர்த்த நாட்கள் போன்ற நேரங்களில், பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பால் கூடுதல் கழிப்பறையும் தேவைப்படுகிறது.இதை கருத்தில் கொண்டு, கோவில் நிர்வாகம் சார்பில், கிழக்கு குளக்கரை பகுதியில், 53 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய குளியல் அறையுடன் கழிப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டது.அதன்படி தரைத்தளத்தில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறை, குளியல் அறையும், முதல் தளத்தில் உடை மாற்றும் அறையும் கட்டும் பணி, கடந்த ஆண்டு நவ., மாதம் துவங்கப்பட்டது.தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று, 80 சவீதம் பணிகள் முடிந்து, மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ