உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரயில் பிரேக் ஷூ உராய்வு; தண்டவாளத்தில் தீப்பொறி

ரயில் பிரேக் ஷூ உராய்வு; தண்டவாளத்தில் தீப்பொறி

செங்கல்பட்டு; அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி, புறநகர் மின்சார ரயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம், பாலுார் ரயில் நிலையத்தில் நின்று, மீண்டும் புறப்பட்ட போது, மின்சார ரயிலின் சக்கரத்தில் இருந்து தீப்பொறி வந்தது. இதைக் கண்ட ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தினார். தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தில் சோதனை செய்த போது, நான்காவது பெட்டியின் சக்கரத்தில், புதிதாக மாற்றப்பட்ட 'பிரேக் ஷூ' தண்டவாளத்தில் உராய்ந்ததால், தீப்பொறி ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, மீண்டும் புதிய 'பிரேக் ஷூ' மாற்றப்பட்டு, ரயில் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை