உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பழங்குடியினர் ஆராய்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம்

 பழங்குடியினர் ஆராய்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பயன்பெறும் வகையில், தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தமிழக மாணவராக இருக்க வேண்டும். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் வீதம் ஆறு மாதத்திற்கும், முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலானவர்களுக்கு மாதம் 25,000 ரூபாய் 3 ஆண்டிற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேற்கண்ட திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, fellowship.tntwd,org.inஎன்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ