கிளாம்பாக்கத்தில் தேங்கும் கழிவுநீரால் அவதி
கி ளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில், 100 மீ., துாரத்திற்கு, ஆண்டு முழுதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. செங்கல்பட்டு -- தாம்பரம் மார்க்கத்தில் இயங்கும் அரசு பேருந்துகள், இந்த இடத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான், பயணியரை இறக்கிவிட்டுச் செல்கின்றன. இங்கு கழிவுநீருடன் மழைநீரும் கலந்து, ஆண்டு முழுதும் தேங்குவதால், கொசு உற்பத்தி அதிகரித்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை கொசுத்தொல்லை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, கழிவுநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.சல்மான், ஊரப்பாக்கம்.