உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

மறைமலை நகர், : துாத்துக்குடி மாவட்டம், சாத்தாங்குளம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன், 20. சிங்கபெருமாள் கோவிலில் தங்கி, மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து திரும்பி வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். சிங்க பெருமாள் கோவில் அடுத்த சத்யா நகர் அருகில் வந்தபோது, மர்ம நபர்கள் இருவர் சாமிநாதனை மடக்கி, தாக்கி மொபைல் போனை பறித்து தப்பிக்க முயன்றனர்.அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த மறைமலை நகர் குற்றப்பிரிவு காவலர்கள், மர்ம நபர்களை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.அதில், இருவரும் சத்யா நகர் பகுதியை சேர்ந்த மணி, 30, கவுதம், 23, என்பதும், இருவர் மீதும் ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களிடமிருந்து இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ