உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் மேலமையூரில் நெரிசலால் அவதி

சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் மேலமையூரில் நெரிசலால் அவதி

செங்கல்பட்டு:மேலமையூரில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சியில், செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையின் இருபுறமும், அதிக அளவில் பல்வேறு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு மருத்துவமனைக்குச் செல்வோர் என, தினமும் அதிகமானோர் செல்லும் இச்சாலையை வாகனங்கள் ஆக்கிரமிப்பதால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. நெரிசலில் சிக்கி குறித்த நேரத்திற்கு பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாமல் மாணவ - மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வாக, இப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போக்குவரத்து போலீசார் ஈடுபட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ