உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் கந்தசுவாமி கோவிலில் வேல்மாறல் பாராயணம்

செய்யூர் கந்தசுவாமி கோவிலில் வேல்மாறல் பாராயணம்

செய்யூர்:செய்யூர் பஜார் பகுதியில், பழமை வாய்ந்த கந்தசுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திர திருக்கல்யாணம் போன்ற விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில், ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று, வேல்மாறல் பாராயணம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை கந்தசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று மாலை 7:00 மணிக்கு, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வேலுக்கு, ஏராளமான பக்தர்கள் வேல் பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை