உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேங்கைவாசல் சித்தேரி நடைபாதை அலங்கோலம்

வேங்கைவாசல் சித்தேரி நடைபாதை அலங்கோலம்

சேலையூர், தாம்பரம் சட்டசபை தொகுதியில் அடங்கியது, வேங்கைவாசல் கிராமம். இங்கு, 25 ஏக்கர் பரப்பளவில் சித்தேரி உள்ளது.கடந்த 2021ம் ஆண்டு, ஏரியை சீரமைத்து, பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல வசதியாக, நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது, காலை மற்றும் மாலையில், ஏராளமானோர் நடைபயிற்சி செல்கின்றனர்.இந்த ஏரி ஒதுக்குப்புறமாக உள்ளதால், காதலர்களுக்கும், 'குடி'மகன்களுக்கும் வசதியாக அமைந்துவிட்டது.இரவில், 'குடி'மகன்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறியதும், அங்கேயே பாட்டில்களை உடைக்கின்றனர். சிலர், தண்ணீரில் பாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர்.ஏரி நடைபாதையில் அரங்கேறி வரும் சமூக விரோத செயல்களை தடுக்க, போலீசார் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை