உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுத்திகரிப்பு நிலையம் பாழ் பல்லவன் தெருவாசிகள் அவதி

சுத்திகரிப்பு நிலையம் பாழ் பல்லவன் தெருவாசிகள் அவதி

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி பல்லவன் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, நகராட்சி சார்பில், 2016ம் ஆண்டு நகராட்சி சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.இதை, இப்பகுதிவதாசிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சில ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. இதன் காரணமாக, இப்பகுதிவாசிகள் மற்ற தெருக்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், நீண்ட நேரம் காத்திருந்து குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது.இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:விண்ணரசி சர்ச் பின்புறம் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் வரிப்பணம் வீணாகி வருகிறது. இதே பகுதியில், தாயுமானவர் தெருவிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்து உள்ளதால், பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் பழுதடைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆழ்துளை கிணறை பழுது நீக்கம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ