உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வழிகாட்டி பலகை வைக்கப்படுமா?

வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வழிகாட்டி பலகை வைக்கப்படுமா?

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வழிகாட்டும் வகையில், வழிகாட்டி பலகை வைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் குறு வட்டத்தின் கீழ் சிங்கபெருமாள் கோவில், தென்மேல்பாக்கம், கொண்டமங்கலம், கருநிலம், திருக்கச்சூர், திருத்தேரி, கீழக்கரணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சிங்கபெருமாள் கோவில் குறு வட்ட வருவாய் அலுவலகம், சிங்க பெருமாள் கோவில் ரயில்வே ஸ்டேஷன் தெருவிலுள்ள இ - சேவை மையத்தில் செயல்பட்டு வந்தது. சமீபத்தில், கீழக் கரணை கலைஞர் தெருவில், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த அலுவலகம், ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து சற்று உள்ளே மறைவான பகுதியில் உள்ளதால், மக்களுக்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல் அலைகின்றனர். இதுகுறித்து மக்கள் கூறியதாவது: புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு செல்லும் போது, அந்த அலுவலகம் எங்குள்ளது என தேட வேண்டிய சூழல் உள்ளது. இடம் தெரியாததால் மெல்ரோசாபுரம், கீழக்கரணை, செங்குன்றம் உள்ளிட்ட பகுதி களுக்கு பலர் வழிமாறி செல்கின்றனர். எனவே, ஜி.எஸ்.டி., சாலையில் மெல்ரோசாபுரம் சந்திப்பு மற்றும் குறுகலான சந்து உள்ளிட்ட பகுதிகளில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செல்லும் வழி குறித்த வழிகாட்டி பலகை வைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை