உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேதமான இருக்கைகள் மாற்றப்படுமா?

செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேதமான இருக்கைகள் மாற்றப்படுமா?

செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு வேலைக்காக வந்து செல்கின்றனர்.அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, காத்திருப்பு பகுதியில் 21 இருக்கைகள் உள்ளன.நாளடைவில் இருக்கைகள் சேதமடைந்து தற்போது 12 இருக்கைகள் உள்ளன.பொதுமக்கள் உட்கார இடமின்றி தரையில் அமரும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஆகையால் அதிகாரிகள், மக்கள் நலன் கருதி காத்திருப்பு பகுதியில் கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை