உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கேளம்பாக்கம் - கோவளம் சந்திப்பு சாலை அகலப்படுத்தப்படுமா?

 கேளம்பாக்கம் - கோவளம் சந்திப்பு சாலை அகலப்படுத்தப்படுமா?

ஓ.எம்.ஆர்., சாலையில், கேளம்பாக்கம் -- கோவளம் சந்திப்பு சாலை உள்ளது. இந்த சாலை, ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. தினமும் அதிக அளவிலான வாகனங்கள், இச்சாலையில் திரும்பிச் செல்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு சாலை, வாகன போக்குவரத்துக்கு ஏற்ப விசாலமாக இல்லாமல், குறுகியதாக உள்ளது. இதனால், வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க, ஓ.எம்.ஆர்., சாலையில் இணையும் கேளம்பாக்கம் -- கோவளம் சந்திப்பு சாலையை அகலப்படுத்த, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.கிருஷ்ணன், கேளம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி