| ADDED : மார் 17, 2024 01:39 AM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் பஜார் பகுதியில், 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காவல் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்டவை செயல்படுகின்றன.மேலும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.இவர்களின் பயன்பாட்டிற்காக, 2005ம் ஆண்டு சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு பயன்பட்டிற்கு வந்தது. கடந்த 2015 - 16ம் ஆண்டு சீரமைப்பு பணி நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி, பழுதடைந்து உள்ளதால், இங்கு வருவோர் இயற்கை உபாதை கழிக்க கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய சுகாதார வளாகத்தை அகற்றி, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.