உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூங்குணம் செல்லும் சாலைகளில் தெருவிளக்கு வசதி வருமா?

பூங்குணம் செல்லும் சாலைகளில் தெருவிளக்கு வசதி வருமா?

சித்தாமூர்: சித்தாமூர் அருகே உள்ள மதுராந்தகம் - சூணாம்பேடு சாலையில் பூங்குணம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் பூங்குணம் கிராமம் உள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்டோர் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வதற்காக, இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இருசக்கர வாகனம் அல்லது நடந்து செல்கின்றனர்,இக்கிராமத்திற்கு செல்லும் சாலையில் பல ஆண்டுகளாக தெரு விளக்கு வசதி இல்லை. அருகே மலைப்பகுதி இருப்பதால் இரவு நேரத்தில் சாலையில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், சாலையில் நடந்து செல்லும் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதேபோல், மலைக்கோடி பகுதியில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலையிலும் தெரு விளக்கு வசதி இல்லை.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பூங்குணம் கிராமத்திற்கு செல்லும் சாலைகளில் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இக்கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை