உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காதலித்து ஏமாற்றியவர் மீது போலீசில் பெண் புகார்

காதலித்து ஏமாற்றியவர் மீது போலீசில் பெண் புகார்

மேல்மருவத்துார்:திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, காதலித்து ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு செய்து, மேல்மருவத்துார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.செய்யூர் அடுத்த கடுக்கலுார் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் சதாசிவன், 23. இவர், முருகம்பாக்கம் அடுத்த மாரிபுத்துார் புது காலனி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகள் ரஞ்சனி, 21, என்பவரை, ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.மேலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக ரஞ்சனியுடன் பேசாமல் சதாசிவன் தவிர்த்து வந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சனி, நேற்று தன் பெற்றோருடன் வந்து, மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சதாசிவன் மீது புகார் அளித்தார்.அதன்படி வழக்கு பதிந்த போலீசார், அது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை