மேலும் செய்திகள்
டிராக்டர் மோதி தொழிலாளி பலி
27-Jan-2025
கூடுவாஞ்சேரி:நெல்லிக்குப்பம் கீழூர் பகுதியில் வசித்து வருபவர் சம்பத் , 55, இவரது மனைவி சசிகலா, 44, கீழூரில் இருந்து, இருசக்கர வாகனத்தில் வண்டலுாருக்கு சென்றனர்.கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள, சிக்னலில் நிற்கும் போது, செங்கல்பட்டில் இருந்து, தாம்பரம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சிக்னலில் நின்று இருந்த ஒரு கார், ராயல் என்ஃபீல்டு புல்லட் மற்றும் சம்பத்தின் இருசக்கர வாகனத்தின் மீது அடுத்தடுத்து மோதியது.இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த, சம்பத்தின் மனைவி சசிகலா சாலையில் விழுந்தார்.தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சசிகலாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ,அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.விபத்தை ஏற்படுத்திய, கண்டெய்னர் லாரி டிரைவர் கருப்பசாமியை கைது செய்து , கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27-Jan-2025