உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருமுக்காடில் சதுர வடிவ பாலம் அமைக்கும் பணிகள் துவக்கம்

திருமுக்காடில் சதுர வடிவ பாலம் அமைக்கும் பணிகள் துவக்கம்

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் துணை மின் நிலையம் வழியாக திருமுக்காடு, சீதாபுரம், பெரும்பேர் கண்டிகை செல்லும் சாலை உள்ளது.அதில், திருமுக்காடு பகுதியில், அச்சிறுபாக்கம் நெடுஞ்சாலை துறையின் வாயிலாக, ஒருவழிப் பாதை, இடைப்பாதையாக தரம் உயர்த்தப்பட்டது.அதன்படி, சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2024 -- 25ம் நிதியாண்டில், 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1 கி.மீ., துாரம் சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது.இதில் நான்கு பகுதிகளில், பழைய உருளை வடிவ குழாய் பாலங்கள் அகற்றப்பட்டு, புதிதாக சதுர வடிவிலான பாலங்கள் அமைக்கும் பணிகள், தற்போது முதற்கட்டமாக நடந்து வருகின்றன.பாலம் அமைக்கும் பணிகள் முடிந்தவுடன், தார் சாலை அமைக்கும் பணி, விரைவில் நடைபெறும் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி