மேல்நிலை தொட்டி ஆப்பூரில் பணி வேகம்
மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளுக்காக இந்த பகுதியில் உள்ள ஏரிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை தொட்டிகளின் வாயிலாக அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த பகுதியில் பள்ளிக்கூட தெருவில் 35 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பழுதடைந்து, சிதிலமடைந்து இருந்தது. எனவே பழைய தண்ணீர் தொட்டியை இடித்து, புதிய தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என, ஆப்பூர் கிராம மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, செங்கல்பட்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 2023- - 24ன் கீழ், 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.